Marriage Preparation Class

உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பருக்கோ விரைவில் திருமணமா? தமிழ்நாட்டிலோ அல்லது இந்தியாவின் மற்ற இடங்களில் நடைபெறுகிறதா?

வேலையின் நிமித்தம் வெளிநாடுகளில் வாழும் கத்தோலிக்கர் அனைவரும், தங்களது திருமணத்திற்காக இந்தியாவில் உள்ள உங்கள் பங்குகளில் ஓலை எழுதும் முன்னர், முறைப்படிக் கத்தோலிக்கத் திருமணத் தயாரிப்புக் கருத்தரங்கில் பங்கேற்று, அதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். சிங்கப்பூரில் வேலை செய்யும் தமிழ் பேசும் கத்தோலிக்கர்களுக்காகத் தமிழில் திருமணத் தயாரிப்புக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்றுப் பயன் அடைந்து, உங்கள் திருமணத்திற்குத் தயார் நிலையில் இருக்க வேண்டுகிறோம்.

திருமணத் தயாரிப்புக் கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோர் கீழுள்ளப் பதிவுப் படிவத்தைப் கவனமாகப் படித்து, உங்கள் பெற்றோருடனும் பங்குத் தந்தையிடமும் கலந்தாலோசித்து, பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்கள் பெயர் உங்களது திருமுழுக்குச் சான்றிதழில் உள்ளது போல் இருக்க வேண்டும்.

முன்னதாகப் பதிவு செய்பவர்களுக்குக் கருத்தரங்கு முடிந்ததும் உங்கள் பங்கேற்புச் சான்றிதழும், திருமணத் தயாரிப்புக் கையேடும், திருமறைச் சுவடியும் (சின்னக் குறிப்பிடம்) வழங்கப்படும். இரண்டு ஞாயிறுகளும் நடைபெறும் வகுப்புகளில் முழுமையாகப் பங்கேற்போருக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு திரு. ஜோக்கின் வில்பிரட்  அல்லது திரு .பேட்ரிக் அவர்களைத் தொடர்பு கொள்ளவும். (அலைபேசி எண்: 9670-5734 / 8113-1905 )

நாள்:20 & 27 ஜூலை 2025 (2 ஞாயிறுள்)
நேரம்:காலை 10.30 முதல் மாலை 5.30 வரை
பதிவு:கீழுள்ளப் பதிவுப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்புங்கள்
இடம்:தூய லூர்து அன்னை ஆலயம்,
50 ஓபிர் ரோடு
சிங்கப்பூர் 188690.
இரயில்/MRT:Bugis (DT14), Jalan Besar (DT22) & Rochor (DT13)
பேருந்து/Bus:N, 4N, 48, 57, 130, 851 & 960
கட்டணம்: S$50 மட்டுமே (மதிய உணவும், இடைவேளையின் போது தேநீர், சிற்றுண்டியும் வழங்கப்படும்)

கருத்தரங்குப் பதிவுப் படிவம்
Registration Link